இலங்கை சுற்றுலாத்துறையில் ஏற்படவுள்ள மாற்றம்
இந்த ஆண்டு சுற்றுலாத்துறைக்கான சிறந்த ஆண்டாக வரலாற்றில் இடம்பிடிக்கும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும், 2024ஆம் ஆண்டிற்கான வருமான இலக்காக சுமார் இரண்டு மில்லியன் வருகையை எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "இந்த ஆண்டிற்கான வருமானம் மற்றும் வருகையின் எண்ணிக்கை ஆகியன இலங்கை சுற்றுலாத்துறையில் இரட்டிப்பை அடையும்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
இந்நிலையில், ஜூலை மற்றும் ஆண்டின் இறுதியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக வளர்ச்சியை கொண்டு 2.3 மில்லியனைத் தாண்டும்.
தற்போது, மே 1ஆம் திகதி முதல் 5 வரை 806,698 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அவர்களில், குறிப்பாக இந்திய மற்றும் ரஷ்ய பயணிகளே அதிகளவில் வருகை தந்து முதன்மை இடத்தை வகிக்கின்றனர்.
சேவைகளை அதிகரிக்க நடவடிக்கைகள்
அதேவேளை, வீசா முறைமையில் ஏற்பட்ட பிரச்சினை தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதால் அது ஒரு தடங்கலாக அமையாது என நம்பப்படுகின்றது.
அது மாத்திரமன்றி, சுற்றுலாப் பயணிகளின் வருகையில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்புக்கு அமைவாக அவர்களுக்கான வசதிகள் மற்றும் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |