யாழ்ப்பாணத்தில் பெரிய தந்தையின் அநாகரிக செயற்பாடு
பெரிய தந்தை தனது தம்பியின் மகளை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய நிலையில் அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீட்டில் வறுமை காரணமாக பெரிய தந்தையின் வீட்டில் மகளை தங்க வைத்ததாக ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். 17 வயதுடைய சிறுமியே இவ்வாறு தங்க வைக்கப்பட்டிருந்தார்.
ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் சனிக்கிழமை பெற்றோர் முறைப்பாடு அளித்தனர்.
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , பெரிய தந்தையை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.