ஈழத்தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளில் புறந்தள்ளப்படும் இனப்படுகொலை விவகாரம்
புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வாழும் சில நாடுகளுக்கு இலங்கையில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என தெரிந்தாலும், அந்நாட்டில் காணப்படும் வெளியுறவு கொள்கை காரணமாக இலங்கைக்காக குரல் கொடுக்க அவை தயங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆலோசணைக்குழு இணைப்பாளர் டி.வசீகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “பெருபான்மையான ஈழத்தமிழர்கள் வாழும் நாட்டிலேயே ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியாத நாம் சிறு குழுக்களாக ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் மாற்றம் எதிர்பார்க்க முடியாது.
ஆகவே, அந்த அந்த நாட்டின் தலைவர்களை அனுகி, தமிழர்களை இனப்படுகொலை வெளிச்சத்திற்கு கொண்டு வர ஆதரவு அதிகரிக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவிரித்துள்ளார்.
மேலும் தமிழ் மக்களின் இனப்படுகொலை, இனப்படுகொலையில் சர்வதேசத்தின் வகிபங்கு மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுசெயலாளர் வி.ரவிகுமார் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆலோசணைக்குழு இணைப்பாளர் டி.வசீகரன் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய அக்கினி பார்வை நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
