கனடாவில் ஆபத்தான நபராக பெயரிடப்பட்ட தமிழ் இளைஞன் : வலைவீசும் காவல்துறை
Canada
Crime
World
By Raghav
கனடாவில் (Canada) ஆபத்தான நபராக பெயரிடப்பட்டுள்ள தமிழ் இளைஞன் ஒருவர் தேடப்பட்டு வருவதாக பீல் (Peel) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரொரன்ரோவை சேர்ந்த 36 வயதான பிரதீபன் நாகராஜா என்பவரே தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை முயற்சி
குறித்த நபர் மீது , இரண்டு கொலை முயற்சி, துப்பாக்கி சூடு மேற்கொண்டமை மற்றும் அங்கீகரிக்கப்படாத துப்பாக்கியை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பிரதீபன் நாகராஜாவுடன் தொடர்பு கொண்டிருந்த எவரும் அல்லது அவர் இருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவரைக் கண்டுபிடிப்பவர்கள் அவரை அணுகாமல், உடனடியாக 911 என்ற எண் அல்லது 905-453-2121 அல்லது 4990 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி