அமெரிக்கா செல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு
தமது நாட்டிற்குள் வருகை தரும் பிற நாட்டு பிரஜைகளுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளவது அவசியமல்ல என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் அறிவித்துள்ளது.
உலகமட்டத்தில் கொரோனாவின் தீவிரம் குறைந்து வருவதையடுத்து, பல நாடுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்தன.
சுற்றுலாத்துறையில் கடும் பாதிப்பு
அறிவியல் மற்றும் தரவுகளின் அடிப்படையில், அமெரிக்க சுற்றுலாத்துறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், 90 நாட்களுக்குள் இது தொடர்பில் மறுமதிப்பீடு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தால், புதிய விகாரங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கும் பட்சத்தில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அவ்வாறு செயற்படும் என்று தெரிவித்துள்ளது.