கறுப்பு சந்தையில் கொடி கட்டி பறக்கும்எரிபொருள் விற்பனை - அரசியல்வாதிக்கும் ஏற்பட்ட நிலை
கறுப்பு சந்தை
நாட்டின் சில பகுதிகளில் சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இரகசியமாக பெட்ரோல் மற்றும் டீசலை ரூ.1000 முதல் ரூ.1200 வரையிலான விலையில் விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அவசர பயணத்திற்கு எரிபொருள் இல்லாத காரணத்தினால் நேற்று கறுப்பு சந்தையில் 5 லீற்றர் பெட்ரோலை லீற்றர் 950 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய நேரிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
போத்தல்களில் அடைத்து விற்பனை
சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்பி பின்னர் குழாய்களைப் பயன்படுத்தி அவற்றை எடுத்து போத்தல்களில் அடைத்து விற்பனை செய்வதாக தெரியவருகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு
இவர்கள் தினந்தோறும் இந்த மோசடியில் பெரும் வருமானத்தை ஈட்டி வருவதாகவும், சில பெட்ரோல் நிலைய ஊழியர்களும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பயணிக்க மிகவும் சிரமப்பட்டாலும் கறுப்பு சந்தையில் எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக எரிபொருள் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சட்டவிரோத எரிபொருள் நிரப்பு நிலையங்களை சுற்றிவளைப்பதாக அரசாங்கம் கூறினாலும் அது வெற்றிகரமாக இயங்குவதாக தெரியவில்லை என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
