எரிபொருளுக்கு தட்டுப்பாடு -யாழில் குதிரை வண்டியில் பயணம் செய்யும் அருட்தந்தை
Jaffna
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் தட்டுப்பாடு
நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர் குதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதன் காரணமாகவே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குதிரை வண்டியில் பயணம்
இன்றைய தினம் யாழ் நகரத்தில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு குதிரை வண்டியில் பயணம் செய்த நிலையில் வீதியில் பயணித்தோர் அனைவரும் அவரது பயணத்தை வியப்புடன் அவதானித்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி