பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
பாடசாலைகளில் ஒரு பாடத்திற்காக ஒதுக்கப்படும் நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கப்படுவதோடு 08 ஆக காணப்பட்ட பாடத்திட்ட அமைப்பு 07 ஆக குறைக்கப்படும் என கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து தெளிவுப்படுத்தும் கூட்டம் நேற்று (12.07.2025) அநுராதபுரத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பாடத்திட்ட முறைகள் குறைப்பு
மேலும் கருத்து தெரிவித்த அவர், “2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த சீர்திருத்தங்களை ஆரம்பிக்கவுள்ளோம். அதன் முதல் படியாக அனைத்து பாடசாலைகளிலும் தரம் 01 முதல் 06 வரையுள்ள வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்படும்.
தரம் 01 முதல் 06 வரை வகுப்புகளில் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும்.நேரம் மாற்றம் மற்றும் பாடத்திட்ட முறைகள் குறைப்பு அனைத்து தரங்களுக்கும் பொருத்தமானதாகும்.
இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் அறிந்திருக்க வேண்டும். எவ்வாறு காலத்தை ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்த வருடமே நாம் ஒரு இலட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்றார்.
இதில் கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் பிரதமர் ஹரினி அமரசூரியவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
