சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்விற்கு சென்றவர் மின்சாரம் தாக்கிப் பலி
Death
Police
Bogawanthalawa
SriLanka
Gemstone Excavator
By Chanakyan
பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் விலங்குகளுக்கு போடப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.
பொகவந்தலாவ கீழ் பிரிவை சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்