அமெரிக்காவிலிருந்து கோட்டாபய பிறப்பித்துள்ள கட்டளை
gotabaya
united states
order
By Sumithiran
நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையில் விசேட கட்டளையொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள அரச தலைவர் கோட்டாபய அங்கிருந்து இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றம் கூடிய வேளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட கட்டளையை வாசித்திருந்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 12வது சரத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.