தடுப்பூசி போடாத பயணிகளை பேருந்திலிருந்து இறக்கி விட்ட அதிகாரிகள் - வேலூரில் சம்பவம்
இந்தியா – வேலுார் பேருந்து நிலையத்தில் தடுப்பூசி போடாத பயணிகளை பேருந்திலிருந்து அதிகாரிகளால் இறக்கி விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேருந்துகளில் முகக்கவசம் அணிந்தவர்களை மட்டும் பயணம் செய்ய முடியும் என அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா? என ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, வேலுார் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி (Karunanidhi), சக்திவேல் (Sakthivel) தலைமையில் வேலுார் பஸ் ஸ்டாண்டில்பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளீர்களா? என கேட்டு அதற்கான சான்றுகளையும் சரி பார்த்தனர்.
அதில், தடுப்பூசி போடாத பயணிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.
அவர்களுக்கு தடுப்பூசியின் அவசியம் குறித்து அறிவுரை வழங்கி அங்குள்ள சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுத்தினர்.
‛‛கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 120 பயணிகள் பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்டனர்.
இதில், பாதி பேர் அருகில் உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என வேலுார் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.