அமெரிக்கா விரிக்கும் சமாதான பொறி
போர் ஏற்படுத்திய விளைவுகளை விடவும் சமாதான காலம்தான் மிகவும் ஆபத்தானது என கூறுவார்கள். இதற்கு நிறையவே உதாரணங்கள் உள்ளன. அமெரிக்கா சமாதான பேச்சுவார்த்தைகளை சமாதான பொறியாக மாற்றிய பல சம்பவங்கள் வரலாற்றில் உள்ளன.
குறிப்பாக பாரிய படைபலம் கொண்ட ஒரு நாடு வலிந்து திணிக்கும் போருக்கு எதிராக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராட்டத்தை நடத்தி வரும் தரப்பை சமாதான காலத்தில் பலவீனப்படுத்திவிடும் என்பது ஒரு போரியல் பார்வை.
தற்போது அமெரிக்கா -ஈரான் இடையே நிலவிவரும் யுத்த நிறுத்தம், நடைபெற்ற நடைபெற இருக்கின்ற சமாதான பேச்சுவார்த்தைகள் ஆகட்டும் இரண்டுமே ஈரானுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் அதிகம் இருப்பதாகவே பாரக்கப்படுகின்றது.
எனவே ஈரான் இதுபோன்ற அமெரிக்காவின் சமாதான பொறிக்குள் வீழ்ந்துவிடுமா அல்லது அங்கு வைத்து அமெரிக்காவை வீழ்த்துமா என்பதுதான் இன்றுள்ள பிரதான கேள்வி.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |