“பெஃன்டா குடிக்க வா” என அழைத்து சிறுவர்களுக்கு மது கொடுத்த நபர்
மஹியங்கனை - கிராந்துருகோட்டை பகுதியில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு குளிர்பானம் எனக் கூறி மது அருந்தக் கொடுத்த நபர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக மஹியங்கனை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் ரத்கிந்த பகுதியில் வசிக்கும், தனியார் பண்ணையில் வேலை செய்யும் 58 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் 15 ஆம் திகதி மாலை தனது வீட்டில் மது அருந்தியிருந்தார்.
அப்போது, அவ்வழியாக சென்ற அயல்வீட்டு சிறுவர்கள் இருவரை அழைத்து “பெஃன்டா குடிக்க வா” என அழைத்து இருவருக்கு மது கொடுத்துள்ளார்.
இதில் 9 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சிறுவர்களின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டுக்கமைய கிராமத்திற்குச் சென்று சந்தேக நபரை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.