பாவனைக்கு உதவாத சீனியை விற்பனை செய்த நபர்! பொஸாரால் கைது
Police
Arrest
SriLanka
Suger
Watala
By Chanakyan
பொலிஸ் பிரிவில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் வத்தளை பகுதியில் பாவனைக்கு உதவாத சீனியை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது 6,25,000 கிலோ கிராம் சீனி மற்றும் சீனி பாணி உள்ளிட்டவற்றை அனுமதியின்றி களஞ்சியப்படுத்தி வைத்திருந்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கம்பஹா நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
25 வயதுடைய மாபொல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.