ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை : ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை
பாடசாலைக் கல்விக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) குறிப்பிட்டுள்ளார்.
உதவித்தொகை
இதன்போது, ஆசிரியர்கள் ஒழுக்கத்துடன் பணியாற்ற வேண்டும் எனவும், ஆசிரியர்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மற்றும் இந்த விடயத்தில் தான் கடுமையாக நடந்து கொள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வருடம் ஆசிரியர்களுக்கு இருமுறை 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கிய போதும் அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக ரணில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |