தொடரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிகள்: அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (Sri Lanka Bureau of Foreign Employment) விசேட புலனாய்வு பிரிவினரால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் துபாய் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக அதே பகுதியில் உள்ள மூன்று நபர்களிடமிருந்து 8 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்கு மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மேலதிக விசாரணை
இதனடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் தெமட்டகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று இரவு தலங்கமை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (3) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |