இராஜினாமா கடிதத்தை கையளித்த அலி சப்ரி- திட்டவட்டமான முடிவை அறிவித்த கோட்டாபய!
ali sabri
gotabaya
sri Lanka
By Kalaimathy
ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கருத்திட்டத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி செயலணியை அமைத்தமை குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி(Ali Sabri) கவலை வெளியிட்டிருந்தார்.
அத்தோடு ஞானசார தேரர் தலைமையில் குறித்த செயலணியை அமைப்பது குறித்து தன்னிடம் ஆலோசிக்கப்படவில்லை என்றும் அலி சப்ரி கூறியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சு பதவியில் இருந்தும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலக அவர் தீர்மானித்து கோட்டாபயவிடம்(Gotabaya Rajabaksha) கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நீதியமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த கடிதத்தை கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும் அவரது சேவைகள் தொடர வேண்டும் என பல காரணங்களைக் கூறி இராஜினாமாவை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார் என அறியமுடிகின்றது.