ரணில் : மொட்டு மோதல் உக்கிரம் : நெலும் மாவத்தைக்கு வருவதை நிறுத்திய சிரேஷ்ட எம்.பிக்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சுப் பதவிகளுக்கு முன்மொழியப்பட்ட சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை அமைச்சுப் பதவிகள் கிடைக்காததாலும் அதிபர் ரணில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தனிப்பட்ட தீர்மானங்களை எடுத்ததாலும் அரசாங்கத்திற்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் நெருக்கடி அதிகரித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, விமலவீர திஸாநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், சி.பி.ரத்நாயக்க, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவி இதுவரை வழங்கப்படாமையினாலும் கெஹலிய ரம்புக்வெல்ல போன்ற மூத்தவர்களின் அமைச்சு பதவிகளை தன்னிச்சையாக மாற்றியமையினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கட்சி தலைமையகத்திற்கு வருவதை நிறுத்திய எம் பிக்கள்
இதேவேளை, அமைச்சர் பதவியை எதிர்பார்த்துள்ள பெரமுனவின் சில சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்தரமுல்ல நெலும்மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு வருவதை நிறுத்திக் கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையினைக் கருத்திற் கொண்டு பெரமுனவில் குழுக்களாகப் பிளவு ஏற்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.