170 ரூபாவாக அதிகரிக்கும் பாண் ஒன்றின் விலை
ஒரு பாணின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என கடந்த வாரம் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக பாண் ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
நாட்டில் மூன்று தரப்பினர் பாண் உற்பத்தியாளர்களாக இருப்பதாகவும், ஒரு குழு சிறிய அளவிலான பாணை தாங்களே தயாரித்து விற்பனை செய்வதாகவும், தற்போதைய விலையான 140 ரூபாவிற்கு 450 கிராம் பாணினை விற்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
160-170 ரூபா விலையில்
மற்றைய பகுதியினர் நடுத்தர அளவில் பாணை உற்பத்தி செய்து வியாபாரிகள் மூலம் கமிஷனுக்கு விற்பவர்கள். பெரிய தொழிலதிபர்கள் பெரிய அளவில் உற்பத்தி செய்து விற்கிறார்கள். இந்த இரு பிரிவினரும் ஒரு பாணுக்கு சுமார் 30 ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், பாணுக்கான பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக இவ்விரு வகையினருக்கும் 450 கிராம் எடையுள்ள பாண் 160-170 ரூபா விலையில் விற்பனை செய்யப்பட வேண்டியுள்ளது. இதனால் சிறு உற்பத்தியாளர்கள் அதே விலையில் பாணினை விற்பனை செய்வது தவிர்க்க முடியாததாக உள்ளது என்றார்.
தனது உறுப்பினர்களுக்கு சரியான எடையுள்ள பாணை தயாரிக்க ஆலோசனை கூறலாம், ஆனால் அதிகபட்ச விலையை நிர்ணயிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
அரசு அதிகபட்ச விலையை குறிப்பிடாததால், உற்பத்தியாளருக்கே விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |