விலையேற்றத்தின் பின்னணியில் மாபியாக்களின் சூழ்ச்சி!
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அதன் தலைவர் திசார ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
எரிவாயு விடயத்தில் மாபியாக்களின் சூழ்ச்சியினால் விலையேற்றம் காணப்படுகின்றது. ஒரு சிலர் மாத்திரம் இந்த வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவதினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயுப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தொடர்ந்தும் உற்பத்திகளை மேற்கொண்டுவருகின்றது. இன்னும் ஒருசில தினங்களுக்குள் சந்தையில் போதுமான லிட்ரோ எரிவாயுவினை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும் நாம் விலை அதிகரிப்பினை செய்யவும் இல்லை செய்யப்போதும் இல்லை. எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் உலகத்தில் நிலைமை சரியாகுமாயின் மேலும் குறைந்த விலைக்கு எரிவாயுவினை மக்களுக்கு வழங்க முடியும் என நினைக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அது சாத்தியமற்றுப் போகுமாயின் ஏற்கனவே சொன்ன மாபியாவின் சதியாக அமையலாம். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.