மட்டக்களப்பில் கடற்றொழில் கிராமத்து மக்களின் அவலநிலை : அலட்சியத்தில் அரசியல்வாதிகள்

Batticaloa Fishing Sonnalum Kuttram
By Independent Writer Feb 25, 2025 08:41 AM GMT
Report

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இன்று வரை மலசலகூடம், கிணறு மற்றும் மின்சாரம் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் 30 குடும்பங்கள் வாழ்ந்து வரும் பாலமீன்மடு மீனவகிராத்தைச் சேர்ந்த மக்களின் அவல நிலை குறித்து அரசியல்வாதிகள் தொடக்கம் அரச அதிகாரிகள்வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, பற்றைக்காடுகளில் மலசலம் கழிக்க செல்லும் பெண்களை காணொளி எடுத்து முகநூலில் பதிவிட்டு அச்சுறுத்துவதாக பெண்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மட்டு நகரில் இருந்து பார்வீதி ஊடாக முகத்துவாரம் வெளிச்ச வீட்டுக்கு அண்மித்த பகுதியில் சுமார் ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பாலை மீன்மடு கடற்றொழிலாளர் கிராமத்தில் குறித்த சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கிராமத்தில் சுமார் 130 குடும்பங்கள் வாழ்ந்துவந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தால் முற்று முழுதாக பாதிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொண்டது.

இந்தநிலையில், இவர்களுக்காக சுவிஸ் கிராமத்தில் வீடுகள் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்ட போதும் சில குடும்பங்களின் பிள்ளைகள் திருமணம் ஆகிய காரணத்தால் பெற்றோர்கள் அங்கிருக்க முடியாமல் வெளியேற வேண்டிய துர்பாக்கிய நிலமை ஏற்பட்டது.

அத்தோடு, சில குடும்பங்களின் பிள்ளைகள் திருமணமாகி பெற்றோருடன் இருக்க முடியாமல் வெளியேற வேண்டிய சூழலில் தாங்கள் இருந்த கடற்றொழிலாளர் கிராமத்தில் சென்று குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், அங்கு ஓலைக்குடிசைகளை அமைத்து குடியேறியவர்களை வெளியேறுமாறும் அரச காணி என பிரதேச செயலகம் அறிவித்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தனர்.

இருந்த போதும் அவர்கள் எங்கும் செல்லமுடியாதால் தொடர்ந்து அங்கு குடிநீர் கிணறு மற்றும் மலசல கூடம் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழந்து வருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் வாழந்து வரும் அந்த மக்களுக்கு கடந்த 15 வருடத்துக்கு மேலாக காணிக்கான பத்திரம் வழங்கப்படாமல் உள்ளது.

அதே நேரத்தில் அந்த கிராமத்துக்கு அருகிலுள்ள அரசகாணிகளை ஐந்து ஏக்கர் தொடக்கம் 50 ஏக்கர்வரை அந்த பகுதியை சேராத செல்வந்தர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் பலர் அத்து மீறி ஏக்கர் கணக்கில் காணிகளை ஆக்கிரமித்து வருகின்றனர்.

இவர்களுக்கு எதிராக பிரதேச செயலகம் சட்ட நடவடிக்கை எடுக்காது வீடு இன்றிய ஏழை மக்கள் தமது பூர்வீக காணியில் குடியேறியதை அரச அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்துவரும் அந்த மக்கள் நிம்மதியாக மலம்கழிக்க கூட செல்லமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.

இந்த நவீன நூற்றாண்டில் ஒரு மாகநர எல்லைக்குள் இன்றுவ ரை மலசல கூடம் குடிநீர் மின்சாம் இன்றி வாழந்து வரும் மக்களின் அவல நிலையை யார் தீர்க்கப் போகின்றனர் ?

மட்டக்களப்பில் கடற்றொழில் கிராமத்து மக்களின் அவலநிலை : அலட்சியத்தில் அரசியல்வாதிகள் | The Problem Of The Fishing Community In Batticaloa

சஞ்சீவ கொலை வழக்கு: மில்லியன் ரூபாய் சன்மானம் - காவல்துறை அறிவிப்பு

சஞ்சீவ கொலை வழக்கு: மில்லியன் ரூபாய் சன்மானம் - காவல்துறை அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை : செவ்வந்தி குறித்து காவல்துறை வெளியிட்ட புதிய தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை : செவ்வந்தி குறித்து காவல்துறை வெளியிட்ட புதிய தகவல்

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: சற்றுமுன் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: சற்றுமுன் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024