இலங்கை வந்த ரஷ்ய சுற்றுலா தம்பதிக்கு ஏற்பட்ட நிலை
மாத்தறை நோக்கிச் சென்ற அதிவேக ரயிலில் பயணித்த ரஷ்ய தம்பதியரின் இரண்டு மடிக்கணனிகள் அடங்கிய இரண்டு பயணப்பொதிகள் திருடப்பட்டமை தொடர்பிலான முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று காலை 8 மணியளவில் ஹிக்கடுவையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ள 32 வயதுடைய ஒர்லோ ஒலெக் என்ற ரஷ்ய நபர் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய தம்பதியினர் கொழும்பில் இருந்து ஹிக்கடுவை வரை ரயிலில் மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்துள்ளனர், மேலும் அவர்கள் இரண்டு மடிக்கணனிகள் அடங்கிய இரண்டு பயணப் பொதிகளை ரயில் பெட்டியில் வைத்துவிட்டு அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
கறுப்புச் சட்டை அணிந்த ஒருவர்
புகையிரதம் பாணந்துறை நிலையத்தை நெருங்கியதும் புகையிரத பெட்டிகளில் நெரிசல் அதிகமாக காணப்பட்டது, அங்கு முன்னால் கறுப்புச் சட்டை அணிந்த ஒருவர் இரண்டு மடிக்கணனிகள் அடங்கிய இரண்டு பொதிகளை எடுத்துச் சென்றதாகவும், மீண்டும் அவரைப் பார்த்தால், அவர் அடையாளம் காட்டப்படுவார் என ரஷ்ய தம்பதியினர் தெரிவித்தனர்.
தீவிர விசாரணையில் காவல்துறை
சம்பவத்தின் பின்னர் புகையிரதம் பாணந்துறை நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு அங்கிருந்து புறப்பட்டதாக ரயில்வே பேச்சாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ரஷ்ய தம்பதியினர் பாணந்துறை தெற்கு காவல்துறையில் முறைப்பாடு செய்ய வந்ததோடு, தனியார் பேருந்தில் ஹிக்கடுவைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
