வடைக்குள் கிடந்த சட்டை ஊசி வாங்கியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
Vavuniya
By Sumithiran
வவுனியாவில்(vavuniya) உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடை ஒன்றுக்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது.
வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக உள்ள சைவ உணவகம் ஒன்றுக்கு இன்று (03.03) சென்ற ஒருவர் அங்கு வடையினை கொள்வனவு செய்துள்ளார்.
வடைக்குள் பெரிய சட்டை ஊசி
குறித்த வடையை வீட்டிற்கு கொண்டு சென்று சாப்பிட்ட போது அவ் வடைக்குள் பெரிய சட்டை ஊசி ஒன்று காணபட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வடையை உணவக முகாமையாளரிடம் காட்டி ஊசி காணப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது.
மன்னிப்பு கோரிய உணவக உரிமையாளர்
தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் இவ்வாறு நடைபெறாது எனவும் கூறி வடையை வாங்கியரிடம் சைவ உணவக முகாமையாளர் மன்னிப்பு கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி