கொடூரத்தின் உச்சம்! தந்தையின் கண்ணை தோண்டி சிதைத்த 19வயதுடைய மகன்
தந்தையின் கண் ஒன்றை தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியாவட்டவான் பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 67 வயதுடைய தந்தையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
தந்தைக்கும் 19 வயதுடைய மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது தந்தையை கடுமையான முறையில் தாக்கிய தந்தையின் கண்ணை தோண்டி சிதைத்துள்ளார்.
இந்த கோர செயலுக்கு போதைப்பொருள் பாவனையே காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அவரது மகனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.