ஐக்கிய மக்கள் சக்தியிலும் வெடித்தது பிளவு
சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கயந்த கருணாதிலக்க, ஹெக்டர் அப்புஹாமி, சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே, ரோஹினி கவிரத்ன, காவிந்த ஜயவர்தன உள்ளிட்டவர்களே இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மே தின கூட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறையற்ற செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ளனர்.
மே தின பேரணியின்போது, சில நபர்களின் செயற்பாடுகள் குறித்து திரிபுபடுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை மேதின கூட்டத்தில் உரையாற்றுவது தொடர்பான விடயத்தில் பொது வெளியில் வைத்து சரத் பொன்சேகாவை, ஹரின் பெர்னாண்டோ தாக்க முயற்சித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
