தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் - அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தொழிற்சங்க போராட்டத்தினால் மரணவர்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியத்திற்கான முழு பொறுப்பினையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
அத்துடன் தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி அல்லது நீதியமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடும் வரையில் தமது போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும் என ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
வேதன முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று 59 நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் இணைந்து ஜனாதிபதியுடனும், நிதியமைச்சருடனும் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு தொடர்ந்தும் கோரி வருகின்றோம்.
எனினும், இதுவரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. பல அமைச்சரவை கூட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவற்றில் முறையான தீர்வு எட்டப்படவில்லை.
இதனால் மாணவர்களே பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.