வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவி மாயம்
Missing Persons
Batticaloa
Sri Lanka Police Investigation
By Sumithiran
வீட்டில் படித்துக் கொண்டிருந்த தமது மகளான மாணவியை காணவில்லையென பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
புதிய காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 10 ம் ஆண்டில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவியே காணாமல் போயுள்ளதாக காவல் நிலைய குற்றத்ததடுப்புப் காவல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ .எஸ்.றஹீம் தெரிவித்தார்.
படித்துக் கொண்டிருந்த மாணவி
மாணவியின் தந்தை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். வீட்டின் அறையொன்றினுள் குறித்த சிறுமி படித்துக் கொண்டிருந்துள்ளார்.
ஓட்டோ ஒன்று சென்ற அடையாளம்
தாய் வந்து பார்த்தபோது மகளைக் காணவில்லை எனவும் வெளியில் ஓட்டோ ஒன்று சென்ற அடையாளம் தெரிந்ததாகவும் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியை தேடும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி