சுதந்திரத்தின் பின்னரான முட்டாள்தனமான அமைச்சரவை - அரசின் பங்காளி கட்சி சீற்றம்
stupid cabinet
after independence
Dew Gunasekera
By Sumithiran
நாட்டுக்கு கிடைத்த சுதந்திரத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட முட்டாள்தனமான அமைச்சரவையே தற்போதைய அரசாங்கத்தில் காணப்படுவதாகவும் அரசாங்கத்திற்குள் மாட்டு மந்தைகள் இருப்பதாகவும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் டியூ குணசேகர(Dew Gunasekera) தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது பணத்தை அச்சடித்து வருவதாகவும், நாட்டில் டொலர்கள் மாத்திரமன்றி ரூபாவும் இல்லையெனவும் குணசேகர தெரிவித்தார்.
அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் நாட்டுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.