போராட்டம் திரைப்படத்தின் வெற்றியை விவரித்த ஒளிப்பதிவாளர்
உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் போராட்டம் திரைப்படம், வர்த்தக ரீதியாக இந்தியத் திரைப்படங்களுக்கு இணையாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி சாதனை படைத்து வருகிறது என திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் AK கமல் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் பாஸ்கரனின் தாராள முதலீட்டில், 8K கேமரா போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இத்திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
300க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டத்தை மேலாண்மை செய்தது, கடுமையான மழை மற்றும் பருத்தித்துறையில் ஏற்பட்ட எதிர்பாராத கிரேன் விபத்து எனப் பல சவால்களைக் கடந்து பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது வெறும் பொழுதுபோக்கு மசாலா படம் அல்லாமல், இந்த மண்ணின் வலிகளையும் போதைப்பொருள் கலாச்சார சீரழிவையும் பேசும் ஒரு குடும்பத் திரைப்படமாகும் எனவும் தொடரும் காணொளியில் விளக்கப்படுத்தியுள்ளார்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |