மட்டக்களப்பில் திடீரென உடைந்து விழுந்த பாலம்:மயிரிழையில் தப்பிய மக்கள்
Batticaloa
Eastern Province
By Laksi
மட்டக்களப்பு - கரவெட்டி பகுதியில் திடீரென உடைந்து விழுந்த பாலத்தினால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கரவெட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட பாலமே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒழுங்கற்ற பாதை அமைப்பு
இதன்போது குறித்த வீதியில் பயணித்த மக்கள் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் ஒழுங்கற்ற பாதையமைப்பே இதற்கு காரணமெனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்