முகத்தை முழுமையாக மூடும் விடயம் தொடர்பில் மீண்டும் வெளிவந்துள்ள செய்தி
sri lanka
people
ali sabri
By Shalini
முகத்தை முழுமையாக மூடும் விடயம் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது. அது பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் விடயம். நீதி அமைச்சுக்கு அப்பாற்பட்ட விடயதானம் என்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.
இதன்படி, பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைப்பதை தடுக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளதோடு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து, சட்ட வரைஞர் திணைக்களம் இது தொடர்பான சட்ட வரைபை தயாரித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளது.
அரசாங்க சட்ட தயாரிப்பு முறையின் படி, அது முறையாக வர்த்தமானியாக வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.