பயணத்தடை தளர்வின்போது ஏற்பட்ட பரிதாபம் - 11 பேரின் உயிர் பறிபோன துயரம்
accident
death
travel ban relaxtion
By Sumithiran
கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு பாதசாரிகள், மோட்டார் சைக்கிள்களில் சென்ற 06 பேர், மிதிவண்டியில் சென்ற இருவர் மற்றும் லொறியில் பயணித்த ஒருவர் என 11 பேர் அடங்குகின்றனர்.
நாடு முழுவதிலும் அமுலாகிய பயணக்கட்டுப்பாடுகள் நேற்று தளர்த்தப்பட்ட நிலையிலேயே இந்த விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி