வவுனியாவில் இன்று இடம்பெற்ற துயரம் -பரிதாபகரமாக பலியான தொழிலாளி
வவுனியா ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள ஈயத்தொழிற்சாலையில் இயந்திரப்பகுதிக்குள் ஈயத்தினை உருக்குவதற்காக பயன்படுத்தப்படும் கல் சுவரை உடைத்துக்கொண்டிருந்தபோது அச் சுவர் பணிபுரிந்துகொண்டிருந்த ஊழியர் மீது இடிந்து விழுந்தமையால் அவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்றையதினம் குறித்த தொழிற்சாலையின் இயந்திரப்பகுதிக்குள் ஈயத்தினை உருக்குவதற்காக பயன்படுத்தப்படும் கல் சுவரை உடைத்துக்கொண்டிருந்தபோது அச் சுவர் பணிபுரிந்துகொண்டிருந்த ஊழியர் மீது இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் மாத்தளை பகுதியை சேர்ந்த வேலு உதயராஜ் வயது 37 என்பவரே மரணமடைந்தவராவார்.
அவரது சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.