யாழில் போதைக்கு அடிமையானவரின் விபரீத முடிவு
Sri Lanka Police
Jaffna
Drugs
By Sumithiran
யாழில் போதைக்கு அடிமையான ஆணொருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். சுழிபுரம் - மூளாய் பகுதியைச் சேர்ந்த தயாபரன் முரளிவாசன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் போதைக்கு அடிமையாகியிருந்த நிலையில் தனது சகோதரியிடம் போதைப்பொருளுக்கு பணம் கேட்டுள்ளார். சகோதரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சகோதரி பணம் கொடுக்க மறுத்ததால் தவறான முடிவு
இந்நிலையில் வீட்டினுள் சென்று தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். வட்டுக்கோட்டை காவல்துறையினர் சாட்சிகளை நெறிப்படுத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்