இலங்கை மீதான பயணத்தடையை நீக்கும் மற்றுமொரு நாடு
srilanka
travel band
philipiness
By Sumithiran
இலங்கை மீதான பயணத் தடையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீக்க பிலிப்பைன்ஸ் முடிவு செய்துள்ளது.
அத்துடன் இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேசம், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தற்போதைய பயணத் தடைகளையும் பிலிப்பைன்ஸ் நீக்கவுள்ளது.
மேற்கூறிய நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள், நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட பொருத்தமான நுழைவு, சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நெறிமுறைகளுக்கு இணங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐக்கிய அமீரகமும் இலங்கை மீதான பயணத்தடையை நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.