சிறிலங்கா கல்வி முறைமையில் ஏற்படப்போகும் மாற்றம்
இலங்கையில் 4 வருடங்களைப் பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (22) கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர், இது தொடர்பான தீர்மானம் விரைவில் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
நாட்டிலுள்ள முன்பள்ளிகள்
”பிள்ளைகளை இலவசமாக முன்பள்ளிக்கு அனுப்ப முடியாவிட்டால், அவர்களுக்கு அருகிலுள்ள முன்பள்ளியில் போதுமான இடம் கிடைக்கும்.
200இற்கும் குறைவான பிள்ளைகளுடன் 4,000 முன்பள்ளிகளும் 100இற்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட 2,900 முன்பள்ளிகளும் நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றன.
இதேவேளை தரம் 10 இல் க.பொ.த. சாதாரணதர பரீட்சையை நடத்தவும், 17 வயதில் மாணவர்கள் உயர்தர பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |