2024 ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு! பட்டியலில் இடம்பிடித்த நாடுகள்
2024 ஆம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆண்டு பிறந்து இருக்கும் நிலையில், உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் வரிசையில் பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் முதலிடத்தில் இடம்பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்(Henley Passport Index) வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் 194 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி(visa-free entry) பெற்ற கடவுச்சீட்டுகள் முதன்மை இடத்தை பிடித்துள்ளன.
ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் முதலிடத்தில்
இந்த தரவரிசையானது சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (International Air Transport Association) தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக ஜப்பான் (Japan) மற்றும் சிங்கப்பூர் (Singapore) நாட்டின் கடவுச்சீட்டுகள் (Passport) தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றன.
193 நாடுகளுக்கான இலவச விசா அனுமதியுடன் பின்லாந்து(Finland), சுவீடன்(Sweden), தென் கொரியா(South Korea) ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன.
இந்தியா 80ஆவது இடத்தில்
மூன்றாம் இடத்தில் 192 நாடுகளுக்கான இலவச விசா அனுமதியுடன் ஆஸ்திரியா(Austria), டென்மார்க்(Denmark), அயர்லாந்து(Ireland) மற்றும் நெதர்லாந்து(Netherlands) ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் கடவுச்சீட்டுகள் 62 நாடுகளுக்கான இலவச விசா அனுமதியுடன் தரவரிசையில் 80 ஆவது இடத்தில் உள்ளன.
ஐரோப்பிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் தரவரிசையில் கணிசமான முன்னேற்றத்தை கடந்த காலாண்டில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |