புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் கைவரிசை காட்டிய சந்தேகநபர்! வெளியாகிய காணொளி
கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரின் பையைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், சிசிரிவி கண்காணிப்பின் உதவியுடன் உடனடியாகக் கைது செய்யப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட செயல்பாட்டு அறையில் உள்ள சிசிரிவி கண்காணிப்பு அமைப்பு மூலம், நேற்று (23) இந்தத் திருட்டுச் சம்பவம் கண்டறியப்பட்டது.
பணியில் இருந்த விமானப்படை வீரர்கள் சந்தேக நபரை உடனடியாக அடையாளம் கண்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
[HEU3D6F ]
சிசிரிவி கண்காணிப்பு
'தூய்மையான இலங்கை' திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சிசிரிவி கண்காணிப்பு அமைப்பானது, பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு 24 மணி நேரமும் செயல்படுகிறது.

பயணிகள் திடீரென நோய்வாய்ப்படுதல், விபத்துகளில் சிக்குதல் அல்லது பிற அவசர உதவி தேவைப்படும் சூழ்நிலைகள் உள்ளிட்ட அவசர காலங்களில் விரைவான உதவியை வழங்குவதற்கான வசதிகளுடனும் செயல்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |