யாழ்.தெல்லிப்பழை வாள் வெட்டு சம்பவம்: மூவர் கைது-காவல்துறையினர் தீவிர விசாரணை(படங்கள்)

Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Dec 07, 2023 10:21 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வானில் வந்த வன்முறைக் கும்பல் நடாத்திய வாள்வெட்டு வன்முறைச் சம்பவமும் அதனுடன் தொடர்ச்சியாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் தெல்லிப்பழை காவல்துறையினர் ஊடாக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (7)முற்படுத்தப்பட்ட வேளை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு போலி முகவரிக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள் மீட்பு

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு போலி முகவரிக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள் மீட்பு

சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரின் பணிப்புக்கமைய யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைது செய்ததுடன் மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

யாழ்.தெல்லிப்பழை வாள் வெட்டு சம்பவம்: மூவர் கைது-காவல்துறையினர் தீவிர விசாரணை(படங்கள்) | Thellipalai Sword Cutting 4 Suspions Arrest Police

கடந்த திங்கட்கிழமை (04) மாலை 5.30 மணியளவில் தெல்லிப்பழை காவல் நிலையம் அருகில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத கும்பல் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியது.

இதில் அளவெட்டியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரொருவர் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 சிசிடிவி காணொளி

தொடர்ச்சியாக ஹயஸ் வானில் தப்பிச் சென்ற வன்முறை கும்பலை காவல்துறையினர் துரத்தி சென்ற போதும் வன்முறை கும்பல் வேகமாக சென்று மல்லாகம் பகுதியிலும் வன்முறையில் ஈடுபட்டு ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியது.

யாழ்.தெல்லிப்பழை வாள் வெட்டு சம்பவம்: மூவர் கைது-காவல்துறையினர் தீவிர விசாரணை(படங்கள்) | Thellipalai Sword Cutting 4 Suspions Arrest Police

இது தொடர்பிலான சிசிடிவி காணொளி வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதன்போது காவல்துறையினர் ஹயஸ் வான் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் வானின் ரயர் பகுதி சேதமடைந்த போதும் வன்முறை கும்பல் சுன்னாகம் ஊடாக தப்பிச் சென்றது. மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம் அருகில் வீதியில் இருந்து வாள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பனவும் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டது.

காயமடைந்தவர்களின் வாக்குமூலம், சிசிடிவி காணொளி என்பவற்றை கொண்டு காவல்துறையினர் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

2024 டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி இல்லை: அவருக்கு பதில் இவர்..!

2024 டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி இல்லை: அவருக்கு பதில் இவர்..!

வன்முறைக்கு பயன்படுத்தபட்ட பொருட்கள்

இந்நிலையில் அன்றைய தினமே வன்முறைச் சம்பவத்தின் சந்தேக நபரொருவர் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

யாழ்.தெல்லிப்பழை வாள் வெட்டு சம்பவம்: மூவர் கைது-காவல்துறையினர் தீவிர விசாரணை(படங்கள்) | Thellipalai Sword Cutting 4 Suspions Arrest Police

தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வன்முறைக்கு பயன்படுத்தபட்ட ஹயஸ் வான் , இரண்டு வாள், முகம் மறைக்க பயன்படுத்தப்பட்ட துணி , ரீசேட், ஹயஸ் வானை உருமாற்றம் செய்யும் வகையில் வானில் இருந்து உரிக்கப்பட்ட ஸ்ரிக்கர் என்பனவும் கைப்பற்றப்பட்டது.

காவல்துறையினரின் விசாரணை

மேலும், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஹயஸ் வான் கைப்பற்றப்பட்டது.

கோப்பாய் - கைத்தடி இடையில் உள்ள மயானமொன்றில் மறைக்கப்பட்ட நிலையில் இரண்டு வாள், முகம் மறைக்க பயன்படுத்தப்பட்ட துணி , ரீசேட் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டு தரப்பினரிடையே நீண்டகாலமாக இருந்த பழிவாங்கும் எண்ணத்தின் அடிப்படையில் கொலை செய்வதற்கான முயற்சியே குறித்த வன்முறைச் சம்பவத்திற்கு பிரதான காரணம் என காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025