தற்போதைய அரசாங்கத்துடன் எவ்விதமான உடன்பாடுகளும் இல்லை - ரிசாட் பதியூதீன் (காணொளி)
தற்போதைய அரசாங்கத்துடன் தனக்கும், தனது கட்சிக்கும் எவ்விதமான உடன்பாடுகளும் இல்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை எமது கட்சியின் கூட்டத்தை நடத்தி தீர்மானிக்க உள்ளோம்.
கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமையவே நாங்கள் செயற்படுவோம். அந்தக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களிலும் நாங்களும் பங்கெடுத்தோம்.
வரவு செலவுத்திட்டம் சம்பந்தமாக நான் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றினேன். அதில் எமது நிலைப்பாட்டைக் கூறி இருக்கின்றேன்.
எனினும் வரவு செலவுத்திட்டத்திற்கு வாக்களிப்பது சம்பந்தமாக கட்சியில் எடுக்கப்படும் முடிவுக்கு அமைய எமது தீர்மானம் அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.