மண்டைதீவு மனிதப் புதைக்குழி : இன்னும் வெளிச்சமிடாத உண்மை
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மண்டைதீவு, பல தசாப்தங்களாக நடந்த போர் மற்றும் அரசியல் வன்முறையின் சோகக் கதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழி (Mass Grave) இன்னமும் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது.
மண்டைதீவில் பொதுமக்களின் சந்தேகங்களுக்கிடையில் தொடங்கிய தோண்டுதல்களின் போது, பல எலும்புக்கூடுகள் மற்றும் மனித உடல் பாகங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இது, போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சுவடுகளாக இருக்கலாம் என கருத்துக்கள் காணப்படுகிறது.
1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் மண்டைதீவு, அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் பகுதிகளிலிருந்து இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட 60க்கு மேற்பட்ட இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் – மண்டைதீவில் தோமையார் தேவாலயம் அருகே உள்ள கிணற்றிலும், செம்பாட்டு பிள்ளையார் கோயில் அருகே உள்ள கிணற்றிலும் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக போர்க்காலத்தில் நீர்வேலி, மண்கும்பான் மற்றும் வேலணை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 120 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இராணுவத்தால் அழைத்துவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு கிணறுகளில் போட்டு மூடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மண்டைதீவு மனித புதைகுழியின் மறைக்கப்பட்ட சுவடுகளைத் தேடி பயணிக்கிறது ஐபிசி தமிழின் “உண்மைகள் பேசட்டும்”....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

