சாந்தன் நாடு திரும்பதடை எதுவும் இல்லை: இலங்கை அரசு அறிவிப்பு
Ali Sabry
Rajiv Gandhi
By Laksi
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தனை மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (6) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
மேலும் இரு நாடுகளிலும் இருந்து சாந்தன் இலங்கை திரும்புவதற்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அவர் நாடு திரும்புவதில் எந்தவித தடையும் இல்லை என்பதுடன், இலங்கை அரசு எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, எந்தச் சந்தர்ப்பத்திலும் சாந்தனுக்கு நாடு திரும்ப முடியும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி