முன்னாள் DIG ரொஹனை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை : இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரதிப் காவல்துறை மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று (22.07.2025) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன்னர் முன்பிணையில் தன்னை விடுவிக்கக் கோரி ரொஹான் பிரேமரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான அதிகாரி இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, முன்னாள் பிரதிப் காவல்துறை மா அதிபரை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மனுதாரரின் சட்டத்தரணியிடம் நீதவான் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
