சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர ரீதியில் பிரச்சினை வெடித்ததா?
sri lanka
people
china
By Shalini
கரிம உரத்தை ஏற்றிச் செல்லும் சீன கப்பல் தொடர்பான விவகாரம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர ரீதியிலான பிரச்சினை அல்ல.
இது இரு தரப்பினருக்கும் இடையேயான வணிக பரிவர்த்தனையின் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை மாத்திரமே என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்று (8) தெரிவித்தார்.
மேலும், இது இரு நாட்டு அரசுகளுக்கும் இடையேயான பிரச்சினை அல்ல என்றும் அவர் கூறினார்.
உரம் தொடர்பில் சீன நிறுவனத்திற்கு எதிராக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மாறாக சீன அரசுக்கு எதிராக அல்ல.
ஆனால், நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கின் உள்ளடக்கம் குறித்து எதுவும் கூற முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.