உக்ரைன் -ரஷ்யா போர் முடிவிற்கு வருமா...! ஜெலன்ஸ்கியின் எதிர்மறையான அறிவிப்பு
ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதற்கான அறிகுறியே இல்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையே நான்கு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.
தற்போது போர் நிறுத்தத்தை கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். இந்த சூழலில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது;
போரை முடிக்க ரஸ்யாவிடமிருந்து எந்த அறிகுறியும் இல்லை
போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா விரும்புவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பதற்றத்தை தணிப்பதற்கான எந்த அடிப்படை நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்கவில்லை.

அனைவரும் டீசலைப் பற்றிப் பேசிக்கொண்டு தானியத்தை மறந்துவிடுகிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில், அனைவரும் ஒரு விவசாய நெருக்கடியைப் பற்றிப் பேசத் தொடங்கிவிடுவார்கள். உருவாகிவரும் அபாயங்களுக்கு சர்வதேச நடவடிக்கை தேவை. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ட்ரம்பின் அழைப்பிற்கு பின்னர் வந்த ஜெலன்ஸ்கியின் கருத்து
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே உடனடியாக எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்; இரு தரப்பினரும் போர்நிறுத்தத்தை மதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து ஜெலென்ஸ்கி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |