எவ்வித உண்மையும் இல்லை - அடியோடு நிராகரித்தார் ரிஷாட் எம்.பி
Gotabhaya Rajapaksa
Rizad
By Vasanth
எந்தவித நிபந்தனைகளும் இன்றி தான் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்திருப்பதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை உறுதி செய்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், வெளியான செய்திகளில் எந்தவொரு உண்மையும் கிடையாது.
அரசாங்கத்துடன் நான் இணைவதாக வெளியாகியுள்ள செய்திகளை நிராகரிக்கிறேன் என்றார்.