பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை! வெளியானது அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Sathangani
நாட்டில் எரிபொருளின் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டதற்கு அமைய பேருந்து கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எரிபொருள் விலை
எனினும் கடந்த இரண்டு முறை எரிபொருள் விலையேற்றத்திலும் பேருந்து கட்டண திருத்தம் செய்யப்படாததால், வரும் ஜூலை மாதமே கட்டண திருத்தம் செய்யப்பட வேண்டும் என பேருந்து சங்கங்கள் வலியுறுத்தின.
இந்த நிலையில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
மரண அறிவித்தல்