கொழும்பு பல்கலையின் வேந்தராக தேரர் ஒருவரை நியமித்த கோட்டாபய!
colombo
university
sri Lanka
muruthtettuwe thero
gotyabaya
By Kalaimathy
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக தேரர் ஒருவவரை நியமித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரே இவ்வதாறு நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவராகவும் ஆனந்த தேரர் உள்ளார் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கான நியமனக் கடிதம் தற்போது கிடைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கோட்டாபய - மஹிந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அண்மைக்காலமாக கடுமையாக அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.