தமிழர்பகுதியில் பாரிய திருட்டு: 4 கடைகளில் ஒரே நேரத்தில் கைவரிசையை காட்டிய திருடர்கள்
Sri Lanka Police
Mannar
Sri Lanka Police Investigation
By Independent Writer
மன்னார் - பஜார் பகுதியில் உள்ள 4 வர்த்தக நிலையங்களில் ஒரே நேரத்தில் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இன்று (1) வியாழக்கிழமை அதிகாலை இரண்டு நகைக்கடை மற்றும் இரண்டு ஆடை விற்பனை நிலையங்களில் கைவரிசையை காட்டியுள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையங்களுக்கு மேல் பகுதியால் குறையை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற திருடர்கள் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் விசாரணை
இன்று காலை வர்த்தக நிலையங்களை திறந்து பார்த்த நிலையில் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு தமது வர்த்தக நிலையங்களுக்கு உள்ளே திருடர்கள் நுழைந்தமை தெரிய வந்துள்ளது.

குறித்த நகைக்கடைகள் மற்றும் ஆடை விற்பனை நிலைய உரிமையாளர்கள் இன்று கால மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |