எரிபொருள் விலையில் மாற்றம் : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Srilanka Bus
By Sathangani Oct 01, 2026 08:01 AM GMT
Report

இலங்கையில் நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டீசலுக்கான விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (1) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய டீசல் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல் விலை இதைவிட அதிகளவிலேயே அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 187.56 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 187.56 ஏக்கர் காணி விடுவிப்பு

பணவீக்கம் அதிகரிப்பு 

எது எப்படி இருப்பினும், கடந்த அமைச்சரவை அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியத்திற்காகப் பல கோடிகளை ஒதுக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு உத்தியாகவே கையாளப்பட்டுள்ளது.

தற்போது பணவீக்கம் 8.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது இந்த 10 ரூபாய் அதிகரிப்பு செய்யப்பட்டாலும், தனியார் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நாங்கள் தயாராக இல்லை என்பதனை மிகத் தெளிவாகக் கூற விரும்புகின்றேன்.

எரிபொருள் விலையில் மாற்றம் : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு | Fuel Price Change Bus Fares Will Not Be Increased

தனியார் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட மாட்டாது. நாங்கள் ஒரு குறிப்பிட்ட பொறிமுறைக்குள் இருக்கிறோம், எனவே கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம். இதற்கான நட்டத்தை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.

இதனால் குறுகிய தூர சேவைகளுக்கு நாளொன்றுக்கு 250 ரூபாயும், நீண்ட தூர சேவைகளுக்கு 1000 ரூபாயும் நட்டம் ஏற்படுகிறது. இருப்பினும், இந்த அரசாங்கம் செய்யும் வித்தை என்ன என்பதை நான் தெளிவாகக் கூற வேண்டும்.

சாதாரண மக்களும், எங்களைப்போன்ற வர்த்தகர்களும், அரச ஊழியர்களும் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்துதான் அரசாங்கம் மானியங்களை வழங்குகிறது.

நாடாளுமன்ற சிரேஷ்ட அதிகாரிகள் இடமாற்றம்

நாடாளுமன்ற சிரேஷ்ட அதிகாரிகள் இடமாற்றம்

 

பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் 

எமது சொந்தப் பணத்தையே மீண்டும் கோடிக்கணக்கில் மானியமாக ஒதுக்குகிறார்கள். இது மிகவும் துயரமான நிலைமையாகும். இது எதிர்காலத்தில் எமது பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைவதற்கான ஒரு முன்னறிவிப்பாகவே நான் காண்கிறேன்.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டது. டீசல் விலை 10 ரூபாயால் அதிகரித்ததால் எமக்கு எந்தத் தாக்கமும் இல்லை, அது பேருந்து கட்டணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது.

எரிபொருள் விலையில் மாற்றம் : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு | Fuel Price Change Bus Fares Will Not Be Increased 

அரசாங்கம் மானியங்களுக்காக இவ்வளவு நிதியை ஒதுக்குவதற்குப் பதிலாக, இந்த 10 ரூபாய் விலை அதிகரிப்பைச் செய்யாமல் இருந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் எமக்கு இந்த நஷ்டம் ஏற்பட்டிருக்காது.

வேறு போக்குவரத்துச் சேவைகள் இந்த 10 ரூபாய் அதிகரிப்பைக் காரணம் காட்டி கட்டணங்களை அதிகரிக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களால் கட்டணத்தை அதிகரிக்க முடியாது.

மானியம் வழங்குவதற்காக இவ்வளவு பாரிய பணத்தை அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிலையில், இந்த 10 ரூபாய் விலை அதிகரிப்பை செய்யாமல் இருந்திருக்க வேண்டும்“ என தெரிவித்தார்.  

ஈழச் சிறுவர்கள் மீதான ஒடுக்குமுறைக்குச் சாட்சி பாலச்சந்திரன்..

ஈழச் சிறுவர்கள் மீதான ஒடுக்குமுறைக்குச் சாட்சி பாலச்சந்திரன்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019